தமிழகம்

தருமபுரி மருத்துவக் கல்லூரி: புதிய முதல்வர் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றிய நசீர் அகமது சையது, சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக இடமாறுதல் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு புதிய முதல்வராக சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.

இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவையியல் பிரிவின் துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர். தற்போது பதவி உயர்வின் மூலம் முதல்வராகி தருமபுரி மருத்துவக் கல்லூரிக்கு வந்துள்ளார்.

நேற்று அவர் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

“மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும், சிறந்த மருத்துவ சேவை தொடர்ந்து கிடைத்திட வழி செய்யப்படும்”, என்றார்.

SCROLL FOR NEXT