பிளஸ் 2 மொழிப்பாடம், வரலாறு, கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவ ராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்களில் இயற்பியல், வேதியியல், உயி ரியல், கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள் நகல்களை 28-ம் தேதி (நேற்று) இணையதளத்தில் (www.scan.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
பதிவிறக்கம்
மீதமுள்ள மொழிப்பாடம், வரலாறு, கணினி அறிவியல் போன்ற பாடங்களுக்கான விடைத் தாள்களை இன்று (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி முதல் மேற்கண்ட இணையதளத் தில் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.
விடைத்தாள் நகலை பெற்ற பின்பு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட இணைய தளத்தில் சென்று Application for Retotalling/Revaluation என்ற பகுதியை கிளிக் செய்து விண் ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் 2 நகல்களை எடுத்து ஜூன் 1-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் சமர்ப் பிக்க வேண்டும்.
சந்தேகம் ஏற்பட்டால்..
மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அதிகாரி அலு வலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மேலும், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு தொடர் பாக தேர்வர்களுக்கு ஏதே னும் சந்தேகம் ஏற்பட்டால் 8012594109, 8012594119, 8012594124, 8012594126 ஆகிய செல்போன் எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.