தமிழகம்

‘சிம் கார்டு’, ‘ஃபேஸ் வாஷ்’ உள்ளிட்ட ஆங்கிலச் சொற்களுக்கு ‘சொல் புதிது’ திட்டத்தில் 43 புதிய தமிழ்ச் சொற்கள்

தமிழ் வளர்ச்சிக் கழகக் கூட்டத்தில் முடிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் வளர்ச்​சிக் கழகத் தலை​வர் ம.ராசேந்​திரன் தலை​மையில் ‘சொல் புதிது’ திட்​டத்​தின் 19-வது கூட்​டம் சென்​னை​யில் நடை​பெற்​றது. பேராசி​ரியர்​கள் சா.சரவணன், ஒப்​பிலா மதிவாணன், மு.ராமசுவாமி, பாரதிபாலன், ம.இளங்​கோவன், சிவ முருகேசன், விஜயலட்​சுமி ராமசாமி, தி.கமலி, ஆசுகவி இனியா, ஊடக​விய​லா​ளர் ராஜ்​கண்​ணன், நீச்​சல்​காரன் ராஜாராமன் பங்​கேற்​றனர்.

இக்​கூட்​டத்​தில் 43 ஆங்​கில சொற்​களுக்​கான புதிய தமிழ்ச் சொற்​கள் உரு​வாக்​கப்​பட்டு, இறுதி செய்​யப்​பட்​டது. அதன் விவரம்:

ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்

Face wash: முகம் துலக்கி

Polythene Sealer: நெகிழிப்பை ஒட்டி

Tweezer: நுண் இடுக்கி

Rebar gauge: வலுக்கம்பித் தடிமன் அளவி

Torque gauge : முறுக்கு விசை அளவி

Feeler gauge: இடைவெளி அளவி

Check-in Time: நுழைவு நேரம்

Check-out Time: வெளியேறும் நேரம்

Dogpiling: கூட்டுத் தாக்குதல்

Cyberbaiting: இணையச் சீண்டல்

Cyberbullying: இணையத் துன்புறுத்தல்

Cyberstalking: இணைய வேவு

POS device: செலுத்துகைக் கருவி

Cover letter: முகவுரைக் கடிதம்

Personal statement: தன்கூற்று

Construction waste: கட்டுமானக் கழிவு

Plush Pillow: மெல்லியல் தலையணை

Plush toy/Soft toy: மெல்லியல் பொம்மை

Perforated brick: துளைச் செங்கல்

Perforated sheet: துளைத் தகடு

Universal Travel Adapter: பொதுவகை மின்னிணைப்பி

Trail bike: கடினவழி ஈருருளி

Hand bike: கையியக்க ஈருருளி

Powercut: மின்வெட்டு

Power shutdown: மின்முடக்கம்

Bread Halwa: ரொட்டி அல்வா

Planned outage: திட்டமிட்ட தடங்கல்

UnPlanned outage : தற்செயல் தடங்கல்

Belated birthday wishes: பிறந்தநாள் கடந்த வாழ்த்துகள்

Distance mode: தொலைநிலை

Online mode: இணைய நிலை

Draft mode: வரைவு நிலை

Mode of transaction: பரிமாற்ற நிலை

Reset mode: மீட்டமை நிலை

Input mode/ Insert mode: உள்ளிடு நிலை

Airplane mode/ Offline mode: தொடர்பறு நிலை

Dual mode: இருமை நிலை

Wakeup call: எழுப்புகை அழைப்பு

SIM card: இணைப்புச் சில்லு

Wakeup: எழுப்புகை

Mode: செயல் நிலை

Silent mode: அமைதி நிலை

Mood: மனநிலை

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT