தமிழகம்

தென்காசியில் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் கைது

செய்திப்பிரிவு

தென்காசியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி செயற்பொறியாளர் பொற்செழியன் கைது செய்யப்பட்டார்.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிகிறார் பொற்செழியன்.சேர்ந்தமங்கலத்தில் கால்வாய் வெட்ட தடையில்லா சான்று கோரியுள்ளார் அமல்ராஜ்.

தடையில்லா சான்று வழங்க 1.5 லட்சம் கேட்டதாக உதவி செயற்பொறியாளர் பொற்செழியன் மீது புகார் எழுப்பப்பட்டது.

சேர்ந்தமங்கலம் அமல்ராஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT