தமிழகம்

அதிமுக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்: ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு இளங்கோவன் பேட்டி

செய்திப்பிரிவு

அதிமுக அரசை வீழ்த்த கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்புவிடுத்துள்ளார்.

குடும்ப திருமண விழாவுக்கு அழைப்பதற்காக இளங்கோவனை அவரது இல்லத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு நிர்வாகம் முற்றிலும் செயலிழந்துவிட்டது. மக்கள் நலப்பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ஊழல் அதிகரித்துள்ளது. நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திமுக - பாமக இடையேயான கடித விமர்சனங்கள் குறித்து எதுவும் கூற விரும்பவில்லை. ஜனநாயகத்தில் கருத்துகளைச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அரசியல் கட்சிகள் என்றால் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அதிமுக அரசை வீழ்த்த கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT