தமிழகம்

இந்தியக் காடுகளில் அழியும்தருவாயில் செம்மரங்கள்: பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

இந்தியக் காடுகளில் செம்மரங்கள் அழியும்தருவாயில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

உலக நாடுகளில் மொத்தம் 30 வகையான செம்மரங்கள் உள் ளன. இந்தியாவில் 4 வகையான செம்மரங்கள் மட்டுமே தமிழகம், ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி மற் றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பரவலாக காணப்படுகின்றன.

ஆந்திராவில் கடப்பா, குண்டூர், கர்னூர், நெல்லூர், சித்தூர், ராயல சீமா, வெலிகொண்டா உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழகத்தில் தருமபுரி, சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் செம்மரங்கள் இயற்கையாக வளர்கின்றன.

செம்மரக்கட்டைகளில் இருந்து மருந்துகள், இசை வாத்தியங்கள் தயாரிக்க இந்தியாவில் இருந்து சீனா, ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாகின்றன.

இந்திய செம்மரக் கட்டை களுக்கு, உலக நாடுகளில் ஏற்பட் டுள்ள வரவேற்பை பார்த்து, தற் போது சீனா, இலங்கை, ஜப்பான் மற்றும் தைவான் நாட்டு காடுகளில் இம்மரங்களை வளர்க்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு கிலோ செம்மரக்கட்டை 300 ரூபாய்க்கு விற்பதால், இந்திய காடுகளில் மறைமுகமாக செம் மரங்களை வெட்டி வெளிநாடு களுக்கு கடத்துகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 20 தமிழக கூலித் தொழிலாளர்களை அம்மாநில போலீஸார் சுட்டுக் கொல்லும் அளவுக்கு, சர்வதேச அளவில் செம்மர கடத்தல் அதி கரித்துள்ளது.

இதுகுறித்து காந்திகிராமம் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் இரா. ராமசுப்பு கூறியதாவது:

தாவர வகைகளில் ‘பேபேஸி’ குடும்பத்தைச் சேர்ந்த செம்மரங்கள் பொதுவாக இலையுதிர் காடுகளில் வெப்பம் மிகுந்த பாறைகள், உயர்வான பகுதிகளில் வளரும். செம்மரங்கள் செஞ்சந்தனம், வால் சந்தனம், ரத்தச் சந்தனம், கரிவேங்கை மற்றும் சிவப்பு சந்தனம் எனவும் அழைக்கப்படுகின்றன. 12 மீட்டர் உயரம் வரை குறைந்த கிளைகளுடன் வளரும்.

இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இரவு நேரத்தில் மட்டுமே பூக் கும்.

இம்மரங்கள் மூலம் கிடைக்கும் கட்டைகள் தோல் நோய், ரத்தப் போக்கு, கண் நோய்கள், தேள்கடி, காயம் மற்றும் வலி நிவாரணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நோய்களை குணமாக்குகிறது.

இந்த மரக் குவளைகளில் தண்ணீரை நிரப்பி குடித்தால் நீரிழிவு, சித்தபிரமை குணமடை வதாகக் கருதப்படுகிறது.

இந்த மரங்கள் கதிர்வீச்சை தடுக்கும் இயல்பு கொண்டவை. அழகு சாதனப் பொருட்கள், முகப்பொலிவுக்கான முகப்பூச்சு பொருட்களும் தயாரிக்கப்படு கின்றன.

ஜப்பானில், ‘சாமிஸன்’ எனும் இசைக்கருவிகள், இந்த மரக் கட்டைகளில் இருந்து தயாரிக் கப்படுகின்றன.

இதற்காக, இந்தியாவில் இருந்து 1930-ம் ஆண்டு முதல் அதிக அளவு செம்மரக் கட்டைகள் அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த மரங்கள் பெரிதாக வளர நீண்டகாலம் ஆகும். மரங்களின் முளைப்புத் திறனும் மிகவும் குறைவு.

இத்தகைய அரிய குணம் கொண்ட செம்மரங்கள், இந்திய காடுகளில் பெருவாரியாக அழியும் தருவாயில் இருப்பதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது. அதனால், இந்த மரங்களை வர்த்தகம் செய்ய அந்த அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி உள்ளது.

அதையும் மீறி இந்திய காடு களில் விரைவாக இந்த மரங்கள் அழிந்துவருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT