‘பணி நீக்கம் செய்யப்பட்ட 21 தொழிலாளர்களை மீண்டும் பணி யில் அமர்த்த வேண்டும், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத தனியார் ஆலை நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, செங்கல்பட்டு பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தொழிலாளர்கள் குடும்பத்தின ருடன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், மறை மலைநகர் தொழிற்பேட்டையில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையில் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தொழிலாளர்களில் 21 பேரை ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதைத் தொடர்ந்து, செங்கல் பட்டு பொதுத் தொழிலாளர்கள் சங்கம் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிலா ளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டிருக்கும் நிலையில், தற்கா லிகப் பணியாளர்களை கொண்டு உற்பத்தி செய்யக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ஆலை நிர்வாகம் செயல்படுவதாகக் கூறி, ஆலை நிர்வாகம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுத் தொழிலாளர்கள் சங்கச் செயலர் கே. சேஷாத்திரி தலை மையில், தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
‘பணி நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும். ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை சங்கத்துடன் பேசித் தீர்வு காண வேண்டும். தொழிலாளர்கள் மீதான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். இந்தப் பிரச்சி னையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கை களும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத் தப்பட்டன.
முன்னதாக, தொழிலாளர்கள் செங்கல்பட்டு நகர சாலையில் ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சி யர் அலுவலகத்தை அடைந்தனர்.