முகப்பேரை சேர்ந்த தொழில் அதிபர் லோகேஸ்வரன். இவர் நேற்று முன்தினம் இரவு காரில் பாரிமுனை சென்றார். டிரைவர் சேகர் காரை ஓட்டி வந்தார். காரில் இருந்து இறங்கிய லோகேஸ்வரன் நண்பர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டார். உயர்நீதிமன் றம் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்துவதற்காக டிரை வர் சேகர் மெதுவாக ஓட்டிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சேகரின் முகத்தில் மயக்க மருந்தை அடித்துள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும், மர்ம நபர்கள் காரை எடுத்துச் சென்றுவிட்டனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த டிரைவர், கார் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக லோகேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தார். எஸ்பிளனேடு போலீஸில் இருவரும் புகார் அளித்தனர். அந்த புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.