காஞ்சிபுரம் மாவட்டத்தில், மன வளர்ச்சி குன்றிய மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு இலவச மருத்துவ உதவிகளை அளிக்க புதுவாழ்வு மனநலத் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
குன்றத்தூர் ஒன்றியத்துக்கு ட்பட்ட ஊராட்சிப் பகுதிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள சமூக மாற்றுத் திறனாளி ஒருங்கிணைப் பாளர், வீடுகளில் ஆய்வு நடத்தி மனவளர்ச்சி குன்றிய மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தை கள், சிறுவர்களைக் கண்டறிவார். அவர்களுக்கு புது வாழ்வு மனநலத் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இதனடிப்படையில் குன்றத் தூரை அடுத்த சோமங்லம் அரசு மருத்துவ மனையில் நேற்று சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியர் சண்முகம் தொடக்கி வைத்தார். இதில், மனநலம் பாதிக்கப்பட்ட 116 குழந்தைகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய 256 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தக் குழந்தைகளின் பெற்றோர் தொழில் தொடங்கும் வகையில் புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் 372 பேருக்கு ரூ. 51.39 லட்சம் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட புதுவாழ்வுத் திட்ட மேலாளர் தனசேகர் கூறும்போது, ‘சிகிச்சை பெற்ற குழந்தைகள் முறையாக மருந்து உட்கொள்கின்றனரா என்று சமூக மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்பாளர் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை கண் காணிக்கப்படும். அவர்களது பெற்றோர் மனதளவில் சோர்வடை யாமல் தடுத்து, அவர்களது குடும்பத்தில் மற்ற பிள்ளைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிறு தொழில் கடனுதவி அளிக்கப்படுகிறது’ என்றார்.