தமிழகம்

முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி தலைவரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

செய்திப்பிரிவு

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் தலைவர் உள்ளிட்ட மூன்று பேரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னையை அடுத்த மாங்காட்டில் செயல்பட்டு வரும் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கேட்டு அகில இந்திய மருத்துவ கவுன் சிலில் விண்ணப்பித்தபோது கல்லூரி கட்டிடத்துக்கு சி.எம்.டி.ஏ., அனுமதி அளித்தது போன்று போலி ஆவணங்களை சமர்ப்பித்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் தலைவர் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கோமதி மற்றும் மேலா ளர் மனோகரன் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப் பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூவரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT