தமிழகம்

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திட்டம்: 1759 பெண்களுக்கு திருமண நிதியுதவி

செய்திப்பிரிவு

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,759 ஏழை பெண்களுக்கு 7036 கிராம் தங்கமும் ரூ.7 கோடியே 38 லட்சம் காசோலையாகவும் சென்னையில் நேற்று வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா.வளர்மதி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் இதை வழங்கினர். இத்திட்டத்தின் கீழ் சென்னையில் 2011-12-ல் 3,700 பேர், 2012-13-ல் 4,424 பேர், 2013-14 -ல் 4,644 பேர், 2014-15-ல் 2,361 பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பத்தாம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 18 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் இத்திட்டத்தில் விண்ணபிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகர மண்டல மருத்துவமனைகளில் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

SCROLL FOR NEXT