தமிழகம்

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வாரக் கடைசி நாட்களை முன்னிட்டு 4,260 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்: விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: கிருஷ்ண ஜெயந்தி மற்​றும் வார இறுதி நாட்​களை முன்​னிட்டு 4,260 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்​கப்பட உள்​ள​தாக அரசு விரைவு போக்​கு​வரத்து கழகம் அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கிருஷ்ண ஜெயந்தி மற்​றும் வார இறுதி நாட்​களை முன்​னிட்டு கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோயம்​புத்​தூர், சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு இன்று வியாழக்​கிழமை 910 பேருந்​துகளும், நாளை வெள்​ளிக்​கிழமை 740 பேருந்​துகளும், நாளை மறு​நாள் சனிக்​கிழமை 880 பேருந்​துகளும் இயக்​கப்​படும். அதே​போல், சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஒசூர்.

பெங்​களூரு ஆகிய இடங்​களுக்கு இன்று 210 பேருந்​துகளும், நாளை 115 பேருந்​துகளும், நாளை மறு​நாள் 115 பேருந்​துகளும் இயக்​கப்​படும்.

மேலும், பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு, கோயம்​புத்​தூர் ஆகிய இடங்​களி​லிருந்து பல்​வேறு இடங்​களுக்கு 200 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். மாதவரத்​தில் இருந்து இன்று முதல் சனிக்​கிழமை வரை கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், வேலூர், ஒசூர், புதுச்​சேரி ஆகிய இடங்​களுக்கு ஒவ்​வொரு நாளும் 95 சிறப்பு பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, சொந்த ஊர்​களுக்கு சென்​றவர்​கள் மீண்​டும் சென்னை மற்​றும் பெங்​களூர் திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவை​க்கேற்ப அனைத்து இடங்​களி​லிருந்​தும் ஞாயிற்​றுக்​கிழமை 805 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும்.

இந்த விடு​முறை தினங்​களில் சொந்த ஊருக்கு செல்ல இன்​றைய தினத்​துக்கு 14,016 பேரும், நாளைக்கு 8,688 பேரும், நாளை மறு​நாளுக்கு 6,459 பயணி​களும் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இது​போல் ஞாயிற்​றுக்​கிழமை பயணத்​துக்கு 14,239 பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இவ்​வாறு தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT