தமிழகம்

இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியாகிறது

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி முடிவடைந்தது. தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 11 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்தபடி, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாணவ, மாணவிகள் கீழ்க்காணும் தேர்வுத்துறை இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

எஸ்எஸ்எல்சி சிறப்பு துணைத்தேர்வு ஜூன் கடைசி வாரம் நடக்கிறது:

எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் இறுதியில் நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிறப்பு துணைத்தேர்வு

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் மே 26 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.125-ஐ பணமாக செலுத்தி பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.

உத்தேச தேர்வு கால அட்டவணை

இதற்கென தனி விண்ணப்பம் எதுவும் கிடையாது. தேர்வுக் கட்டணம் தவிர பதிவு கட்டணமாக ரூ.50- பள்ளியில் செலுத்த வேண்டும். இதற்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

அட்டவணை:

ஜூன் 23 - திங்கள்- தமிழ் முதல் தாள்

ஜூன் 24- செவ்வாய்- தமிழ் இரண்டாம் தாள்

ஜூன் 25- புதன்- ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 26- வியாழன்- ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூன் 27- வெள்ளி- கணிதம்

ஜூன் 28- சனி- அறிவியல்

ஜூலை 3- திங்கள்- சமூக அறிவியல்

SCROLL FOR NEXT