தமிழகம்

பத்தாம் வகுப்பில் 92.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

செய்திப்பிரிவு

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதில் மொத்த தேர்ச்சி விகிதம் 92.9%.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம்: 90.5% | மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 95.4% ஆகும். வழக்கம் போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாகவுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 90.7% ஆக இருந்தது.

பாடவாரியாக முழு மதிப்பெண்:

கணிதப் பாடத்தில் 27,134 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 1,15,853 பேர் 100-க்கு 100 பெற்றனர். சமூக அறிவியலில் 51,629 பேர் 100-க்கு 100 பேர் பெற்றுள்ளனர்.

முதல் வகுப்பில் தேர்ச்சி:

பத்து லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்துக்கு மேல் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 7,96,466 ஆகும்.

அரசு தேர்வுத் துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை கல்லூரிச் சாலை டிபிஐ வளாகத்தில் தேர்வுத் துறையின் இயக்குநர் கே.தேவராஜன் தேர்வு முடிவுகளையும், மாநில அளவில் ரேங்க் பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு கடந்த மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடந்தது. இத்தேர்வை 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள், 5 லட்சத்து 32 ஆயிரம் மாணவிகள் மற்றும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் எழுதியுள்ளனர்.

          
SCROLL FOR NEXT