தமிழகம்

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த 3 பேர் கைது

செய்திப்பிரிவு

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த டென்னிஸ் என்பவர் 2011-ம் ஆண்டு சென்னை காவல் ஆணை யர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், "விஜயகுமார் என்பவர் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது கூட்டாளிகள் சுகுமாரன், ரஞ்சித்சிங், பழனி, சுரேஷ், சூர்ய பிரபு, கலா, மோகன் ஆகியோ ருடன் சேர்ந்து, அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக தன் னிடம் இருந்து ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் அவர்கள் கூறியபடி வேலையும் வாங்கித்தர வில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசா ரணை நடத்தி விஜயகுமார், பழனி, சுரேஷ், சூர்யபிரபு, கலா, மோகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுகுமாரன், ரஞ்சித்குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

மின்வாரிய வேலை

இதேபோல சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த உலகநாதன் என்பவர் கொடுத்த புகாரில், "மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த ஆறுமுகம், ராஜா, கன்னி யாகுமரியை சேர்ந்த யூஜின் ஜெயராஜ் ஆகியோர் ரூ.25 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டனர்" என்று கூறியி ருந்தார். புகாரின்பேரில் ஆறு முகம், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். யூஜின் ஜெயராஜ் தலைமறைவாகி விட்டார்.

சிறையில் அடைப்பு

இரு சம்பவங்களிலும் தலை மறைவான சுகுமாரன், ரஞ்சித் குமார், யூஜின் ஜெயராஜ் ஆகி யோரை தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி, தலைமறை வாக இருந்த 3 பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத் தனர்.

SCROLL FOR NEXT