தமிழகம்

விளம்பரப் பலகை வைக்க புதிய கட்டுப்பாடு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காஞ்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்சி மற்றும் பொது விளம்பர பலகை களை வைப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சாலைகள் மற்றும் பொது இடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் பொது விளம்பர பலகைகள் அகற்றுவது மற்றும் நெறிமுறை படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமையில் ஆய்வு கூட்டம் நேற்று நடை பெற்றது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் விவரம் வருமாறு: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, நெடுஞ்சாலை மற்றும் பொது இடங்களில் அரசியல் கட்சி மற்றும் பொது விளம்பர பலகைகள் வைக்க மாவட்ட ஆட்சியரிடம் 7 நாட்க ளுக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும்.

மேலும் போலீஸாரிடம் தடை யில்லா சான்று பெற வேண்டும். சாலையின் இரண்டு பக்கங்களிலும் விளம்பர பலகை அமைக்க தடை விதிக்கப்படுகிறது. ஏதேனும் ஒருபக்கத்திலும் மட்டுமே விளம்பர பலகை வைக்க வேண்டும்.

தனி நபருக்கு சொந்தமான நிலத்தில் விளம்பர பலகை வைப்பதற்கு, நிலத்தின் உரிமை யாளரிடம் ஒப்புதல் சான்று பெற வேண்டும் அனுமதியுடன் வைக்கப்படும் எந்தவொரு விளம்பர பலகையும், மூன்று நாட்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

விளம்பர பலகையில் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்ற ஆணை எண் விவரங்களை பதிவு செய்திருக்க வேண்டும். சாலை சந்திப்பு பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட் சிக்குட்பட்ட பகுதியில் ஒரு வி ளம்பர பலகை வைக்க ரூ. 100 கட்டணமாக செலுத்த வேண்டும். ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் ரூ.50 செலுத்த வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகை அமைக்க ரூ. 200 கட்டணமாக செலுத்த வேண்டும் ஆகிய விதிகளை பின்பற்றி, விளம்பர பலகைகளை அமைக்க வேண்டும். இவ்வாறு இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: இணைப்பு சாலைகள் மற்றும் விதிமுறை களுக்கு மாறாக வைக்கப்படும் விளம்பர பலகைகள், போலீஸாரின் உதவியோடு வருவாய்துறையினர் அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போலீஸாரின் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே விளம்பர பலகை அமைக்க அனுமதி வழங்கப்படும். விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்படும் விளம்பர பலகைகள் தொடர்பாக, நகராட்சி ஆணையர், பேரூராட்சி செயலர் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம். அனுமதியின்றி வைக்கப்பட்டதாக, ஏற்கெனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் வருவாய்துறை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி விஜயகுமார் கூறியதாவது: விளம்பர பலகைகள் அமைப்பதற்கான தடையில்லாச் சான்றுகளை, அந்தந்த பகுதிகளில் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் பெற்றுக் கொள்ள லாம். மேலும், அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகள் தொடர்பாக போலீஸாரிடம் எழுத்துபூர்வமாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றார்.

திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது: அதிமுகவினர் விதிமுறைகளுக்கு மாறாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். திமுக தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தடுப்பதற்காகவே மாவட்ட நிர்வாகம் தற்போது முனைப்பு காட்டி வருகிறது என்று கூறினார்.

SCROLL FOR NEXT