தமிழகம்

பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும்: முதல்வரின் தனிப்பிரிவில் ஜாக்டா மனு

செய்திப்பிரிவு

பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி ஜாக்டா (தமிழ்நாடு ஆசிரி யர் சங்கங்களின் கூட்டு நட வடிக்கை குழு) சார்பில் முதல் வரின் தனிப்பிரிவில் மனு அளிக் கப்பட்டுள்ளது.

ஜாக்டாவின் ஒருங்கிணைப் பாளர் பி.கே.இளமாறன் தலைமை யில் உயர்மட்ட குழு உறுப்பினர் கள் நேற்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். முதல் வரின் தனிப்பிரிவில் மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து பி.கே.இளமாறன் கூறியதாவது:

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்தும் வெயிலினால் ஏற்படும் சரும நோய்களிலிருந்தும் மாண வர்களை காப்பாற்றி உடல் நலன் பேணவும் நல்ல உடல் ஆரோக் கியத்துடன் கற்றல்- கற்பித்தல் நடக்கவும், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க ஜாக்டா சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.தன் பங்களிப்பு ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்துக்கு தனி கல்விக் கொள்கை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன் வைத் துள்ளோம் என்று கூறினார்.

SCROLL FOR NEXT