கொடைக்கானல் அருகே மலைக் கிராமத்துக்குள் புகுந்த யானை, விவசாயி ஒருவரை இழுத்துச் சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகளவில் உள் ளது. கொடைக்கானல் அருகே அஞ்சுரான்மந்தை கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராமசாமி (59). இவர் நேற்று அதிகாலை காலைக்கடன் கழிக்க நடந்து சென்றுள்ளார். அப்போது 6 யானை கள் குட்டிகளுடன் அந்த கிராமத் துக்குள் புகுந்துள்ளன. அதிகாலை நேரத்தில் கிராமத்தைச் சுற்றிலும் மூடுபனி சூழ்ந்து இருந் ததால் யானைகளின் நடமாட்டம் தெரியாமல் ராமசாமி அவற்றின் அருகே சென்றுவிட்டார். அப்போது ஒரு யானை அவரைத் துரத்தியது. தப்பியோடிய அவரை யானை துரத்தி பிடித்து 200 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது. இதில் அதிர்ச்சியிலேயே அவர் இறந்தார். உடல் அசைவு இல்லா மல் அவர் இறந்ததால் யானை அவரை விட்டுச்சென்றது.
இதுபற்றி தகவல் அறிந்த உதவி வனப் பாதுகாவலர் தெ.விஜய குமார் மற்றும் வனத்துறையினர், யானை தாக்கி இறந்த ராமசாமியின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். மேலும், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், ரூ.2.75 லட்சம் நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள் ளார்.
உதவி வனப் பாதுகாவலர் தெ.விஜயகுமார் கூறும்போது, யானைகள் குட்டிகளை பாது காக்கவே இழுத்துச் சென்று தாக்கியதில் அவர் இறந்துள்ளார். யானைகளை கண்காணித்து வனப்பகுதியில் மீண்டும் விரட்ட தேவதானப்பட்டி வனச்சரகர் கருப்பையா, கொடைக்கானல் வனச்சரகர் தெய்வசர்மா ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தப்புவது எப்படி?
யானை ஆராய்ச்சியாளர் பாஸ் கரன் கூறும்போது, யானைகள் இருப்பது தெரியாமல் பக்கத்தில் செல்வதால்தான் யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக் கின்றனர். யானைகளை விரட் டும்போதும், கூச்சல் போடும் போதும், அங்கும், இங்குமாக விரட்டும்போதும் பாதுகாப்புக்காக யானைகள் தாக்குகின்றன. யானைகள் நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்காது.
பாறைகள், பள்ளம்மேடு இருந்தாலும் யானைகள் சீராக 30 கி.மீ. வேகத்தில் ஓடக்கூடியவை. அவை விரட்டினால் தப்புவது இயலாது. அதனால், யானையின் பார்வையில் தப்பி ஓடாமல் புதர் களில் மறைந்து வளைந்து ஓடினால் தப்பிவிடலாம். மனித நடமாட்டத்தை யானைகள் 2 கி.மீ. தொலைவு வரை கண்டு பிடித்துவிடும் என்றார்.