தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழத்தில் 10 புதிய படிப்புகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்று அப்பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் காயத்ரி கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் காயத்ரி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழத்தில் முதுகலை திரை இசை, இளங்கலை திரை கலை உள்ளிய்ட 10 படிப்புகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அதற்கான விண்ணப்பங்கள் இம்மாத இறுதியில் வழங்கப்படும். இந்த ஆண்டு முதல் 10 புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படுகிறது'' என்று காயத்ரி தெரிவித்துள்ளார்.