தமிழகம்

உதகையில் 10-வது ஆண்டாக பழங்கால கார்கள் அணிவகுப்பு

செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்ட பழங்கால கார்கள் சங்கம் சார்பில், 10-வது பழங்கால கார் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி உதகையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார். தமிழகம் விருந் தினர் மாளிகையில் தொடங்கிய அணிவகுப்பு, ஆட்சியர் அலுவல கம், கமர்சியல் சாலை வழியாக ஒய்.டபிள்யூ.சி.ஏ.-வில் நிறைவடைந் தது. அங்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

1929-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டிரையம்ப் சூப்பர்-7 கார் இடம்பெற்றிருந்தது. ஆஸ்டின், வோல்ஸ்வேகன், கௌலி (1936), இத்தாலியன் பியட் (1956), ரஷ்ய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட யாஸ் ஜீப் (1941), வோல்ஸ்லி (1942), சவர்லேட் (1951), மோரீஸ், மோரீஸ் மைனர், டாஜ், ஸ்டாண்டர்டு, போர்டு, அம்பாசிடர் கார் மற்றும் வில்லீஸ் ஜீப்கள் என 60 நான்கு சக்கர வாகனங்களும், ராயல் என்பீல்டு, புல்லட், லேம்பி, லேம்பரட்டா ஆகிய 20 இரு சக்கர வாகனங்களும் இடம்பெற்றிருந்தன.

மேலும், வெலிங்டன் ராணுவ மையத்துக்கு வரும் வி.ஐ.பி.-க் களை அழைத்துச் செல்லும் பிளைமவுத், பென்ஸ் கார்களும் அணிவகுத்து வந்தன.

இந்த அணிவகுப்பு, கண்காட்சி யில் ஏவிஎம் நிறுவனத்தின் எம்.எஸ்.குகன், தனது டாஜ் வாகனத்தை காட்சிப்படுத்தி இருந்தார்.

அவர் கூறும்போது, “பழங்கால வாகனங்களை வைத்திருப்பது பொழுதுபோக்கு அம்சம்; பராமரிப்பது சிரமம். அதற்கான உதிரிப் பாகங்கள் கிடைப்பதில்லை. பழங்கால மெக்கானிக்குகள் உதவியுடன் வாகனங்களை பராமரித்து வருகிறோம். செலவு அதிகம் என்றாலும், இந்த வகை கார்கள் வைத்திருப்பது பெருமையான விஷயம்” என்றார்.

SCROLL FOR NEXT