தமிழகம்

300-க்கும் மேற்பட்ட உணவு வகை: கோடை உணவுத் திருவிழா சென்னையில் தொடங்கியது

செய்திப்பிரிவு

சென்னையில் 300-க்கும் மேற்பட்ட உணவு வகைகளுடன் கூடிய கோடை உணவுத் திருவிழா நேற்று தொடங்கியது.

பிராம்ப்ட் டிரேட்ஃபேர் நிறுவனம் சார்பில் கோடை உணவுத் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று தொடங் கியது. இதுகுறித்து, இந்நிறுவனத் தின் நிறுவனர் இ.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

சென்னை மக்களுக்கு அனைத்து வகையான உணவு களும் ஒரே இடத்தில் இடம்பெற செய்வது இதுவே முதன் முறையாகும். தென்னிந்திய, வடஇந்திய உணவுகள், இயற்கை உணவுகள், தானிய வகை உணவுகள், பாரம்பரிய உணவு கள், சைவ மற்றும் அசைவ உணவு கள், ஆந்திர உணவு வகைகள் என 300-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இத்திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.

மேலும், 100 வகையான தோசை கள், 20 வகையான இட்லிகள், 50 வகையான கேக்குகள், 25 வகையான மீன் வறுவல்கள், 10 வகையான ஐஸ்கிரீம்கள் உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளன. இதைத் தவிர, கோடை சூட்டைத் தணிக்கும் வகையில் இளநீர், தர்பூசணி, நுங்கு உள்ளிட்ட பழ வகைகளும் இடம் பெற்றுள்ளன.

இவ்விழாவில் குழந்தை களுக்கான போட்டிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடை பெறுகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை உணவுத் திருவிழா நடைபெறும்.

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

SCROLL FOR NEXT