சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேவ்ஸ் அமைப்பு சார்பில் கைத்தறி துணி கண்காட்சி நடைபெறுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: பட்டு, பருத்தி துணிகளில் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு ரகங்கள் தயாராகின்றன.
இத்தகைய துணி வகைகளை தயாரிக்கும் நெசவாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவும், இந்தக் கலை அழிந்துவிடாமல் தடுக்கவும் அவர்களின் தயாரிப்புப் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் பணியை வேவ்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
தற்போது திருவான்மியூர் கலாக்ஷேத் ராவில் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நாளை (மே 10) வரை இக்கண்காட்சி நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும்.