தமிழகம்

அம்மா சிமென்ட் மையம் நெல்லையில் தொடக்கம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி புதிய பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு வணிக வளாகத்தில், அம்மா சிமென்ட் விற்பனை மையத்தை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் நேற்று தொடங்கி வைத்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் முத்துக்கருப்பன், விஜிலா சத்தியானந்த், மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: இங்கு சிமென்ட் ஒரு மூட்டையின் விலை ரூ.190. பயனாளிகள் வீடுகட்டுவதை உறுதி செய்யும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட வீடுகட்டும் திட்டத்தின் வரைபடம் அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மேற்பார்வையாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாலை ஆய்வாளர் ஆகிய யாரேனும் ஒருவரிடம் உறுதிமொழிக் கடிதம் பெற்றும், அத்துடன் சிமென்ட் மூட்டைகள் பெறுவதற்கு தொகையினை கணக்கீடு செய்து அதை வங்கி வரைவோலை மூலமாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.

பணம் செலுத்தும் தேதியினை அடிப்படையாகக் கொண்டு பயனாளியின் மூப்பீடு பட்டியல் பராமரிக்கப்படும். மூப்பீடு எண் பட்டியலின் அடிப்படையில் மட்டுமே சிமென்ட் வழங்கப்படும் என்றார் அவர்.

SCROLL FOR NEXT