தமிழகம்

பாழடைந்த கிணற்றில் விழுந்த 2 புள்ளிமான்கள் பலி

செய்திப்பிரிவு

திருத்தணி அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 2 புள்ளிமான்கள் உயிரிழந்தன.

திருவள்ளூர் மாவட்டம், திருத் தணி அடுத்த கோரமங்கலத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் புள்ளிமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங் குகள் கணிசமாக உள்ளன.

இந்நிலையில், கோரமங்கலம் வனப்பகுதி அருகே உள்ள வயல்வெளியில் இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை கிரிக்கெட் விளையாடிக் கொண் டிருந்தனர். அப்போது வனப்பகுதி யிலிருந்து 2 புள்ளிமான்கள் மிரண்டு ஓடிவந்ததில் விவசாய நிலத்தில் இருந்த 50 அடி ஆழ முள்ள பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தன. இதில், பலத்த காயமடைந்த அவை உயிருக்கு போராடின.

தகவலறிந்த திருத்தணி வனத்துறையினர் மற்றும் திருத்தணி தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு புள்ளிமான்களை மீட்டனர். எனி னும், அவை இரண்டு உயிரி ழந்துவிட்டன. வனத்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT