இடித்த வீடுகளை கட்டித்தரக்கோரி மெரினா சாலையில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர்.
சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரை கிராமத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் மீனவர் களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக் கப்பட்டிருந்தன. இந்த வீடுகள் மிகவும் பழுதடைந்த நிலை யில் இருந்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 584 வீடுகள் இடிக்கப்பட்டன. அதில் வசித்த மீனவர்களுக்கு தற்காலிக கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டன. வீடு கட்டு வதற்கான பணிகளை குடிசை மாற்று வாரியம் இன்னும் தொடங்க வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்களும், அவர் களின் குடும்பத்தினரும் நேற்று காலையில் மெரினா கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கம் அருகே திரண்டு சாலை மறியல் செய்தனர்.
தகவல் அறிந்த மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பால கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பொதுமக்களை சமா தானப்படுத்தி, மறியலை கைவிட வைத்தார். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.