தமிழகம்

42,000 வருவாய்த் துறை பணியாளர்கள் போராட்டம்: எஸ்ஐஆர் பணியை புறக்கணித்த ஊழியர்கள்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை வரு​வாய்த் துறை ஊழியர்​கள் நேற்று முற்​றி​லு​மாக புறக்​கணித்​தனர். ஏறத்​தாழ 42 ஆயிரம் அரசுப் பணி​யாளர்​கள் இந்​தப் போராட்​டத்​தில் ஈடுபட்டுள்​ளனர். கடந்த 4-ம் தேதி முதல் தமிழகத்​தில் வாக்​காளர் சிறப்பு தீவிர திருத்​தப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

ஏறத்​தாழ 71 ஆயிரம் பேர் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​களாக (பிஎல்ஓ) நியமிக்​கப்​பட்​டுள்​ளனனர்.இந்​நிலை​யில், அதிக பணி நெருக்​கடி காரண​மாக நவ.18 முதல் எஸ்​ஐஆர் பணி​களை புறக்கணிக்​கப் போவ​தாக வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்டமைப்பு அறி​வித்​திருந்​தது.

உரிய பயிற்சி அளிக்​காமலும், நிதி ஒதுக்​கீடு செய்​யாமலும் அவசரக​தி​யில் பணி​களை மேற்​கொள்ள நிர்ப்​பந்​தம் செய்வதாகவும், இதனால் கடும் மனஉளைச்​சல் ஏற்​படு​வ​தாக​வும் அவர்​கள் புகார் தெரி​வித்​துள்ளனர். இந்​நிலை​யில், வரு​வாய்த் துறை ஊழியர்​கள் நேற்று பணிக்கு வந்​த​போதும் எஸ்​ஐஆர் பணி​களை முற்​றி​லு​மாகப் புறக்​கணித்​தனர்.

படிவங்​களைப் பெறு​வது, பூர்த்தி செய்த படிவங்​களை இணையதளத்​தில் பதிவேற்​றம் செய்​வது உள்​ளிட்ட பணி​களை அவர்​கள் மேற்​கொள்​ள​வில்​லை. இதனால், தமிழகம் முழு​வதும் எஸ்​ஐஆர் பணி​கள் பாதிக்​கப்​பட்​டன.

இதுகுறித்து வரு​வாய்த் துறை சங்​கங்​களின் கூட்​டமைப்பு மாநில ஒருங்​கிணைப்​பாள​ரும், தமிழ்​நாடு வரு​வாய்த் துறை அலு​வலர் சங்க மாநிலத் தலை​வரு​மான எம்​.பி.​முரு​கையன் கூறும்​போது, “கி​ராம உதவி​யாளர்​கள், விஏஓ-க்​கள், வரு​வாய் ஆய்​வாளர்​கள், துணை வட்​டாட்​சி​யர்​கள், வட்​டாட்​சி​யர்​கள், சர்​வேயர்​கள், கள உதவி​யாளர்​கள் என வரு​வாய்த் துறை​யில் மட்​டும் 42 ஆயிரம் பேர் எஸ்​ஐஆர் பணி புறக்​கணிப்​பில் ஈடு​பட்​டுள்​ளனர்.

நாங்​கள் வழக்​க​மான பணி​களை மேற்​கொண்​டாலும், எஸ்​ஐஆர் பணியை மேற்​கொள்ள மாட்​டோம். அவசரம் அவசர​மாக எஸ்​ஐஆர் பணியை மேற்​கொள்​வதை அரசு கைவிட வேண்​டும்” என்றார்.

தமிழ்​நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை​வர் மு.​பாஸ்​கரன், பொதுச் செய​லா​ளர் வெ.சோமசுந்​தரம் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “எஸ்​ஐஆர் பணி புறக்​கணிப்​புப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள வரு​வாய்த் துறை அலு​வலர்​கள் மற்​றும் ஊரக வளர்ச்​சித் துறை அலு​வலர்​கள் சங்​கம் சார்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்ள நியாய​மான கோரிக்​கையை தேர்​தல் ஆணை​யம் ஏற்​று, போதிய காலஅவ​காசம் வழங்​கி, தகு​தி​யான வாக்​காளர்​கள் விடு​ப​டா​மல் பட்​டியல் தயாரிக்க வேண்​டும்” என்று தெரிவித்​துள்ளனர்.

SCROLL FOR NEXT