தமிழகம்

குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்கள் அபாயக் கட்டத்தை தாண்டி விட்டனர்: மருத்துவர்கள் தகவல்

செய்திப்பிரிவு

ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டனர் என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவ அதிகாரி கூறினார்.

விபத்தில் படுகாயம் அடைந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த கிருஷ்ணாவுக்கு தொண்டையில் ரத்த நாள அறுவை சிகிச்சையும், திரிபுராவை சேர்ந்த சுமந்தோ தேட்நாத்துக்கு காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

குண்டு வெடித்ததில் சிறிய ஆணிகள், கம்பிகள் சிதறி கை, கால்களில் குத்தியதால் காயமடைந்த 4 பேருக்கு வியாழக்கிழமை இரவு டாக்டர்கள் குழுவினர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அரசு செயலர் ஆய்வு

இந்நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். குண்டு வெடிப் பில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களுக்கு தொடர்ந்து அளிக் கப்படும் சிகிச்சைகள் பற்றி டாக்டர் களிடம் கேட்டறிந்தார். அப்போது, மருத்துவமனை துணை கண்காணிப் பாளர் டாக்டர் நாராயணசாமி, ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் உடன் இருந்தனர்.

ரயில்வே அதிகாரிகள் விசாரணை

இதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் விட்டல் மற்றும் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோர் காயம் அடைந்த வர்களிடம் விசாரணை நடத்தினர்.

அதன்பின், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காயமடைந்தவர்களிடம் குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரணை நடத்தினோம். அவர்களும் தெரிந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு டாக்டர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்ற னர். குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளோம்.

பெங்களூர், காட்பாடி, அரக்கோணம் ரயில் நிலையங் களில் விசாரணை நடத்தப்படும். குண்டு வெடிப்பு பற்றிய முழுமையான விவரம் இன்னும் தெரியவில்லை. குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றனர்.

கேள்வி மேல் கேள்வி

குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர் கள் கூறுகையில், “ரயில்வே அதிகாரி கள் குழுவினர் ஒருவர் மாற்றி ஒருவர் திரும்பத் திரும்ப வந்து விசாரணை நடத்துகின்றனர். உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு நாங்கள் வலியால் அவதிப்பட்டு வருகிறோம். ஆனால், அவர்கள் விசாரணை என்ற பெயரில், எங்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு தொந்தரவு செய்கின்றனர். எங்களை தூங்கவே விடுவதில்லை. எங்களை விட்டு விட்டால் நிம்மதியாக ஊருக்கே சென்றுவிடுவோம்” என்றனர்.

14 பேரும் நலம்

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப், “குண்டுவெடிப் பில் படுகாயம் அடைந்த இரு வரும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலமாக உள்ளனர். அவர்கள் அபாயக்கட்டத்தை தாண்டி விட்டனர். மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 12 பேரில் 4 பேருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொருவராக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT