தமிழகம்

படைப்பாற்றலும், விடாமுயற்சியுமே அரிய கண்டுபிடிப்புகளுக்கு காரணம்: அறிவியல் விழாவில் அப்துல் கலாம் பேச்சு

செய்திப்பிரிவு

சென்னையை அடுத்த தாழம்பூர் அக்னி தொழில்நுட்பக் கல்லூரியில் “வளர்ச்சி அடைந்த இந்தியா-2020” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘அக்னி இக்னைட் 2015’ அறிவியல் திருவிழாவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் தங்கள் வாழ்க் கையில் உயர்ந்த குறிக்கோளை நிர்ணயித்து அதை அடையும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும். இன்றைய தொழில் நுட்ப யுகத்தில் இளம் ஆராய்ச் சியாளர்கள் ஒட்டுமொத்த மனித குலத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும். படைப்பாற்றலும், விடாமுயற்சியும் கொண்டவர் கள்தான் அரும்பெரும் கண்டு பிடிப்புகளை உருவாக்கி யுள்ளனர். இவ்வாறு அப்துல் கலாம் கூறினார் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT