தமிழகத்தில் இரண்டாம் கட்ட இந்திரதனுஷ் தடுப்பூசி மருந்து முகாம் இன்று தொடங்குகிறது. விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக தடுப்பூசி முகாம் இன்று (21-ம் தேதி) முதல் வரும் 29-ம் தேதி வரை நடக்கிறது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறிய தாவது:
இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்கள், கிரிஷ்ணகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல் பழனி, விழுப்புரம் கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் சென்னை, தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாநகராட்சிகளில் நடக்கிறது.
தடுப்பூசி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப் பூசி போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசி முகாமில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் தன்னார் வலர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.