தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-2 தேர்வு மூலமாக 1,241 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கான போட்டித்தேர்வு ஜூலை 26-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் பயிற்சி மையம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான வகுப்புகள் மே 20-ம் தேதி தொடங்குகின்றன.
பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 044-26618056, 99406-38537 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று பெரியார் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள் ளார்.