தமிழகம்

அடுத்தது என்ன?- ஜெயலலிதா முக்கிய ஆலோசனை

பிடிஐ

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

இந்நிலையில், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஜெயலலிதா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற தலைவராக ஜெயலலிதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு அவர் மீண்டும் முதல்வராக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT