தமிழகம்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் ரகளை: திமுக கவுன்சிலருக்கு அதிமுகவினர் அடி, உதை

செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சி சாதா ரண கூட்டம் மேயர் சவுண்டப் பன் தலைமையில் நேற்று நடந் தது. கூட்டத்தில் ‘அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 5-வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டதற்கு மாநகராட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கும்’ தீர்மானத்தை சவுண் டப்பன் வாசித்தார்.

இதை வரவேற்று அதிமுக கவுன்சிலர்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன் சிலர் தெய்வலிங்கத்தை நோக்கி அதிமுக மண்டலக்குழு தலை வர் மாதேஸ்வரன், தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசினார். அதே நேரம் அதிமுக கவுன் சிலர்கள் மாரியப்பன், தியாக ராஜன், பாமா கண்ணன், ஜமுனா ராணி உள்ளிட்ட 15-க்கும் மேற் பட்டவர்கள், தெய்வலிங்கத்தைத் தாக்கினர்.

பெண் கவுன்சிலர்கள் தெய்வ லிங்கத்தை ஆபாச வார்த்தைகளில் வசைபாடினர். பதிலுக்கு தெய்வ லிங்கமும் திட்ட கோபம் அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் மாரி யப்பன், பாமா கண்ணன், ஜமுனா ராணி ஆகியோர் சேர்ந்து தெய்வ லிங்கத்தைத் தாக்கி, அவையில் இருந்து விரட்டினர்.

இதில், தெய்வலிங்கம் நிலை குலைந்து கீழே விழுந்தார். அப் போதும் அவரை விடாமல் அதிமுக கவுன்சிலர்கள் காலால் மிதித்து தாக்கினர். பலத்த காயம் அடைந்த தெய்வலிங்கத்தை அவையில் இருந்து மெயின் ரோடு வரை அதிமுக கவுன்சிலர்கள் விரட்டி னர். இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் ‘கவுன்சிலர்களை ஏவி தாக்குதல் நடத்திய மேயர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோஷமிட்டனர்.

தொடர்ந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள செரி சாலையில் அமர்ந்து திமுக கவுன் சிலர்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த திமுக மாநகர பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலை மையில் திமுகவினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் மேயர் சவுண்டப்பன் அறை முன்பு திரண்ட திமுகவினர் ஆபாசமாக பேசி சத்தமிட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக திமுகவினர் போராட்டம் தொடர்ந்தது. போலீ ஸாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து திமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT