சொத்து வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான தேதி விரைவில் வெளியாகும் என்று நம்புவதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் வண்ணாரப் பேட்டையில் தொடங்கி உயர் நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமான நிலையம் வரை 23.1 கி.மீ தூரத்துக்கு முதல் மெட்ரோ ரயில் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கிமலை வரை 22 கி.மீ தூரத்துக்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளையும் 2016-ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது.
கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நிறைவடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்க பல்வேறு கட்ட பாதுகாப்பு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக கோயம்பேடு முதல் அசோக்நகர் வரையில் பாதுகாப்பு ஆய்வு முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆய்வுகளை நடத்தி சென்ற ரயில்வே பாதுகாப்பு ஆணையரக அதிகாரிகளுக்கும் முழு திருப்தி ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தொடக்க தயாராக இருக்கும் நிலையில், சேவை தொடங்குவது எப்போது என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை யாகி இருப்பதால், விரைவில் அவர் முதல்வராக பதவியேற்பது உறுதியாகி விட்டது. இதையடுத்து, மெட்ரோ ரயில் சேவை தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்ட போது:
‘கோயம்பேடு அசோக்நகர் வரையில் மெட்ரோ ரயில்களை இயக்க தயார் நிலையில் உள்ளோம். இந்த வழித்தடத்தில் இயக்க 20 மெட்ரோ ரயில்கள் தயார் நிலையில் உள்ளன. வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலையாகியுள்ளதால், தமிழக அரசு மெட்ரோ ரயில் சேவை தொடக்க தேதியை ஒரு வாரத் திலோ அல்லது 10 நாட்களிலோ அறிவிக்கலாம் என எதிர்பார்க் கிறோம்.
மக்கள் எளிமையாகவும், வசதி யாகவும் பயணம் செய்யும் வகையில் புதிய வசதி களை ஏற்படுத்தி தரவுள்ளோம். குறிப்பாக ரயில் டிக்கெட்களை சிரமமின்றி பெறும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். செல்போன் மூலம் ரயில் டிக்கெட் பெறும் வகை யில் புதிய வசதியை அறிமுகப் படுத்தவுள்ளோம்’ என்றனர்.