தமிழகம்

கொட்டாங்குச்சி ஓடுகளிலும் கலைவண்ணம் காட்டும் இளைஞர்

மு.முருகேசன்

தேவையற்றது என நாம் வீசியெறியும் கொட்டாங்குச்சியில் அழகான- கலைநயமிக்க ஆபரணங்களைச் செய்து வருகிறார் ஆனந்த பெருமாள் (34). மதுரை மாவட்டம் பொன்னகரத்தில் பிறந்த இவர், பிபிஏ படித்துவிட்டு வங்கியில் பணியாற்றி வந்தார்.

3 ஆண்டுகளுக்கு முன் இயற்கை ஆய்வாளர் கோ. நம்மாழ்வாரை சந்தித்த அந்த நிமிடமே, தனது வாழ்வின் நோக்கமாக இயற்கை சார்ந்த செயல்பாடுகளில் தீவிரமாக இறங்க வைத்தது என்கிறார் ஆனந்தபெருமாள்.

“இயற்கையோட இணைந்து வாழணும். கிராமங்களில் கிடைக் கிற இயற்கை சார்ந்த பொருட் களைக் கொண்டே, கிராம மக்க ளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கணும்னு நம்மாழ்வார் அடிக்கடி சொல்வாரு.

நானும் அப்படியான ஏதாவது ஒரு வேலைய செய்யணும்னு முடிவு செஞ்சேன். நாம எல்லாரும் பய னற்றதுன்னு தூக்கிப் போடுற எல்லாப் பொருள்கள்லேயும், ஏதோ ஒரு பயன்பாடு நிச்சயமா இருக்கும். அந்த முயற்சியிலதான் கொட்டாங்குச்சியப் பயன்படுத்தி கலைப் பொருட்கள் செய்ய ஆரம் பித்தேன்…” என்று சொல்லும் ஆனந்தபெருமாளின் ஆரம்பக்கட்ட செயல்பாடுகளுக்கு பெரிதும் உறுதுணையாய் இருந்தவர்கள் ‘வானகம்’ எனும் சூழலியல் அமைப்பைச் சேர்ந்த நண்பர்கள்.

“முதல்ல நான் யோசிக்கும் போதே, நாம செய்யிற எந்த பொரு ளும் மறுசுழற்சியுடைய பொருளா இருக்கணும். அதைச் செய்யிற யாரையும் சுயசார்போட இயங்க வைக்கணுங்கிறதில உறுதியா இருந்தேன். நான் செய்யிற இந்த கொட்டாங்குச்சி பொருட்கள் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற ஒரு கைத்தொழிலாகவும் இன்றைக்கு மாறியுள்ளது…” என்று நம்மி டம் பேசிக்கொண்டே ஆனந்தபெரு மாளின் கைகள், உடைந்த கொட் டாங்குச்சி ஓடுகளை வேறு வேறு வடிவங்களில் சேர்த்திணைக்க, அது அவர் கைகளில் கலைய ழகு மிளிரும் மாலையாக உருமாறு கிறது.

கொட்டாங்குச்சி ஓடுகளில் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆபரணங்கள், அலங்கார விளக்கு, மெழுகுவர்த்தி கூடு, படங்கள் மாட்டும் சட்டம், தலை வர்களின் உருவங்கள், கலை பொருட்கள் என ஒவ்வொன்றும் நம்மை முதல் பார்வையிலேயே ஈர்க்கின்றன.

“இது மட்டுமில்லே. கிராமங் கள்ல எளிதில் கிடைக்கிற பனை ஓலை, வேப்பமரக் கட்டை என அனைத்துப் பொருட்களைக் கொண்டும் கலைப் பொருள்களை உருவாக்கலாம். பொதுவாக, இப் படியான கலைப் பொருட்களைப் பயன்படுத்தும் மக்கள் நாளடைவில், பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை வெகுவாய் குறைத்துக் கொள்கிறார்கள் என் பதும் கூடுதல் மகிழ்வைத் தருகி றது. அடுத்ததாக, இந்த கலைப் பொருட்களைக் கொண்டு, கல் யாண மேடை உட்பட விழாக்களுக் கான மேடை அலங்காரத்தையும் இயற்கை சார்ந்த சூழலியல் மேடையாக செய்ய திட்டமிட்டு இருக்கிறேன்..” என்று அடுத்ததாக தான் செய்யவிருக்கிற கனவுத் திட்டம் பற்றியும் விவரிக்கும் ஆனந்தபெருமாள், தற்போது திருநெல்வேலியில் வசித்து வருகிறார்.

“என்னோட இந்த முயற்சி கிராமப் புற பெண்களுக்கான வேலைவாய்ப் பாக, வருமானம் தருகிற ஒரு கைத் தொழிலாக அமைய வேண்டும். இதைக் கற்றுக்கொள்ள யார் விரும்பினாலும், அவர்களுக்கு பயிற்சி தரவும் நான் தயாராக இருக்கிறேன். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் எவ்வளவோ செய் யணும்னு ஆசைப்பட்டாரு நம்மாழ்வார்.

அவரோட பல்வேறு கனவுகள்ல என்னால முடிஞ்சது, இந்த ஒரு சிறு முயற்சி. இது பலருக்கும் பயன் தர்ற ஒரு கைத்தொழிலா மாறினா, அதுவே எனக்கு பெரிய மனநிறைவைத் தரும்..” என்று சொல்லும் ஆனந்த பெருமாள் போன்ற பல இளைஞர் கள் நம்மாழ்வாரின் இயற்கையோடு இணைந்த வாழ்வியலுக்கான புதிய பணிகளை உற்சாகமாக செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

மனித வாழ்வோடு இணைந்ததாய் இனி இயற்கையும் சேர்ந்தே செழிக்கட்டும்.

SCROLL FOR NEXT