கோத்ரெஜ் நிறுவனம் ‘என்எக்ஸ்டபிள்யு’ என்ற பெயரில் அடுத்த தலைமுறை குளிர்சாதனப் பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்வேறு உணவுப் பொருளையும் நீண்ட நாட்கள் பாதுகாக்க வெவ்வேறு விதமான குளிர்நிலைகள் தேவைப்படும். இந்த புதிய என்எக்ஸ்டபிள்யு குளிர்சாதனப் பெட்டிகளில் சில்லர் (மைனஸ் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ்), ஃபிரிட்ஜ் (1 முதல் 5 டிகிரி), பேன்ட்ரி (4 முதல் 8 டிகிரி) என்ற 3 விதமான குளிர் மண்டலங்கள் இருக்கும். உணவுப் பொருளின் தன்மைக்கு ஏற்ப அங்கு அதை வைத்து பாதுகாக்கலாம். இதுமட்டுமின்றி தொடு திரை கட்டுப்பாட்டு பேனல், மோஷன் சென்சார் லைட், ஏர் லாக் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.
புதிய குளிர்சாதனப் பெட்டி அறிமுக நிகழ்ச்சியில் கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவன வர்த்தக தலைவர் கமல் நந்தி கூறும்போது, “கோத்ரெஜ் நிறுவனம் நமது தேவைக்கு ஏற்ப தொடர்ந்து புதிய புதிய கண்டுபிடிப்புகளை நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கி வருகிறது” என்றார்.
மூத்த பொது மேலாளர் ஸ்வாதி ரதி கூறும்போது, “புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் எங்கள் நிறுவனத்துக்கு ஆர்வம் அதிகம். புதிய குளிர்சாதனப் பேட்டி ஸ்மார்ட்டான தேவைக்கு ஏற்ப செயல்படும் கருவியாக உங்கள் சமையல றையை அலங்கரிக்கும்” என்றார்.
குளிர்சாதனப்பெட்டி பிரிவு தலைவர் சிவாஜி சென்குப்தா பேசும்போது, “இந்த குளிர்சாதனப் பெட்டியில் உள்ள பல அம்சங்கள் முற்றிலும் புதிதானவை. மடித்து வைக்கக்கூடிய ரேக், பிரகாசமான எல்இடி விளக்கு இதில் இருக்கும்” என்றார்.
3 வண்ணங்களில், ஐனாக்ஸ், காஸ்மாஸ், பிளாட்டினா ஆகிய வெளிப்புற டிசைன்களுடன் கிடைக்கும் இந்த குளிர்சாதனப் பெட்டிகளின் விலை ரூ.49 ஆயிரம் முதல் ரூ.79 ஆயிரம் வரை இருக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் இதிலிருந்து வெளியேறாது.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.