தமிழகம்

சவுதி அரேபியாவில் கடற்கொள்ளையரால் தமிழக மீனவர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி மாவட்டம் பொழிக் கரையைச் சேர்ந்த மீனவர் மதிவளன் சவுதி அரேபியாவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடற்கொள்ளையரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தை அடுத்த பொழிக்கரை கிராமத்தைச் சேர்ந் தவர் மதிவளன் (43). இவர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி தொழிலுக்குச் சென்று வந்தார். நேற்று முன்தினம் மதிவளனுடன் 8 மீனவர்கள் விசைப்படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இரவு நேரத்தில் அங்கு ஒரு விசைப்படகில் வந்த கடற்கொள் ளையர்கள், மீனவர்களின் படகை நிறுத்துமாறு மிரட்டியுள்ளனர். பயந்து போன மீனவர்கள் படகை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளனர். ஆவேசம் அடைந்த கடற்கொள்ளையர்கள் மீனவர்களை நோக்கி துப்பாக்கி யால் சுட்டுள்ளனர். இதில் மதிவளன் மீது குண்டுபாய்ந்து படகிலேயே இறந்து போனார்.

மதிவளவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டது குறித்து பொழிக் கரையில் உள்ள அவரது குடும் பத்துக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. இதனால் பொழிக்கரை கிராமமே சோகத் தில் ஆழ்ந்துள்ளது. மதிவளனுக்கு மேரி பெல்லாச்சி என்ற மனைவி யும், ஆனந்தன் ஜெரிட்டா (13) என்ற மகனும், ஆன்சல் ஜெரிசா (10) என்ற மகளும் உள்ளனர்.

சவுதியில் மீனவர் மதிவளன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு உள்ளிட்ட மீனவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT