தமிழகம்

திரைப்படம், சின்னத்திரை விருதுகள்: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

தமிழக அரசின் திரைப்படம் மற்றும் சின்னத்திரை விருதுகளைப் பெற விண்ணப்பிப்பதற்கான தேதி 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில் 2013-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள், 2011,12 மற்றும் 13-ம் ஆண்டுகளுக்கான திரைப்பட மானியம் வழங்க தகுதியுடைய சிறந்த தமிழ் திரைப்படங்கள், நெடுந்தொடர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 20-ம் தேதி (நேற்று) மாலை 5 மணி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த காலக்கெடுவை நீட்டித்து வழங்க வேண்டும் என திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று விண்ணப்பங்கள் பெறப்படுவது 27-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் தரமணி, எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன வளாகத்தில் உள்ள திரைப்படத் துறையினர் நலவாரியத்தில் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து பெறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SCROLL FOR NEXT