பொறியியல் பட்டதாரிகள், தொழிற்பயிற்சி (ஐடிஐ) பயின்றவர்களுக்கு இந்திய ராணுவத்தில் நிறைய சம்பளத்தில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளதாக சென்னை பிரிவு ராணுவ பணிநியமன துணை இயக்குநர் ஜெனரல் சங்க்ராம் தால்வி கூறினார்.
இதுதொடர்பாக சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள சென்னை பிரிவு பணி நியமன தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் சங்க்ராம் தால்வி கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் மொத்த ஆண்கள் எண்ணிக்கை யில் இருந்து ராணுவ தேர்வுக்கு தகுதியானவர்கள் என குறிப்பிட்டவர்களைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்படு கின்றன. இதன்படி தமிழகத்துக்கு என 2,413 பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்பு பணி நாகப்பட்டினம், தருமபுரி, புதுச்சேரியில் ஜூன், ஜூலை, செப்டம்பர் மாதங்களில் நடக்க வுள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்களுக்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதி போதும். ராணுவத்தில் சேர 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
10-ம் வகுப்பு கல்வித் தகுதி, நன்னடத்தை, இருப்பிடம், சாதி ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு 8 புகைப் படங்கள், என்சிசி சான்றிதழ் (இருந்தால்), உறவுமுறை சான் றிதழ் (தேவைப்பட்டால்), 18 வயது பூர்த்தியடையாமல் இருப்பின் பெற்றோரிடம் இருந்து அதற்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றுடன் வரவேண்டும்.
ஆள்சேர்ப்பு பணியில் முதலாவ தாக, 1.5 கி.மீ. தூரத்தை 6 நிமிடத்தில் கடக்க வேண்டும். அடுத்து உடற்தகுதி, தேர்வு, மருத்துவப் பரிசோதனை நடத்தப் படும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப் பப்படுவார்கள். தமிழகம், ஆந்திரத்தில் ஏராளமான பொறி யியல் பட்டதாரிகள் உருவா கின்றனர். அவர்களும் தொழிற் பயிற்சி படித்தவர்களும் ராணு வத்தில் சேரலாம். ராணுவத்தில் ஜவானாக சேரும் பொறியியல் பட்டதாரி ஒரே ஆண்டில் அதிகாரி ஆகவும் வாய்ப்பு உள்ளது.
இதுபற்றி மேலும் விவரங்களை http://joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் அறியலாம். ராணுவ பணி நியமன மையத்தின் சென்னை தலைமையகம் 044-25674924, திருச்சி மையம் 0431-2412254, கோயம்புத்தூர் மையம் 0422-22222022 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் அறியலாம்.