தமிழகம்

பாவேந்தருக்கு சென்னையில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும்: தமிழக அரசுக்கு பாரதிதாசனின் பேரன் கோரிக்கை

குள.சண்முகசுந்தரம்

பாவேந்தர் பாரதிதாசனுக்கு சென்னையில் மணி மண்டபம் எழுப்ப வேண்டும் என்று அவரது பேரன் கோ.பாரதி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரதிதாசனின் 125-வது பிறந்த நாள் ஏப்ரல் 29-ம் தேதியில் இருந்து ஓராண்டுகாலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு புதுச்சேரி அரசு கடந்த 25 மற்றும் 26-ம் தேதிகளில் பாரதிதாசனுக்கு பிறந்தநாள் விழா எடுத்தது. புதுச்சேரியில் பாரதிதாசன் வாழ்ந்த வீடு அரசுடமை ஆக்கப்பட்டு அங்குள்ள ஆய்வு மையத்தில் அவரது படைப்புகளும் அவர் பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மையத்தில் உள்ள ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கி உயர் ஆய்வு மையமாக மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாரதிதாசனின் பேரன் கோ.பாரதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

சுதந்திரப் போராட்டத்தில் எங்கள் தாத்தா பாரதிதாசன் ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழ் இலக் கியத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். 1964-ல் பாரதி தாசன் இறந்த பிறகு, அவர் வாழ்ந்த வீடு நினைவுச் சின்னமாக இருக்க வேண்டும் என்பதற்காக, 1971-ல் அதை அரசிடம் ஒப்படைத்துவிட்டு ஓட்டு வீட்டில் வாடகைக்கு குடியேறி னோம். கடந்த 18 ஆண்டுகளில் அங்கு ஆய்வுக்காக வந்த சுமார் 1,500 மாணவர்களுக்கு பாரதிதாசன் அறக் கட்டளை மூலமாக இலவச தங்கு மிடம், உணவு கொடுத்து அவர் களுக்குத் தேவையான தகவல் களையும் திரட்டிக் கொடுத்திருக் கிறேன்.

பாரதியாருக்கும் திருவள்ளு வருக்கும் தேசிய அங்கீகாரம் வழங்கி இருக்கும் மத்திய அரசு, பாரதிதாசனையும் அங்கீகரிக்க வேண்டும் என்று அண்மையில் தாத்தாவின் நினைவு இல்லத்துக்கு வந்திருந்த தருண் விஜய் எம்.பி-யிடம் கோரிக்கை வைத்தேன்., சென்னையில் தாத்தாவுக்கு மணி மண்டபம் எழுப்பி, ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் பாரதிதாசன் பெயரில் சாதி மறுப்பு மையம் ஒன்றையும் தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். பாரதிதாசனின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க எங்களிடம் ஸ்கிரிப்ட் உள்ளது. அதை திரைப்பட மாக எடுப்பதற்கு தமிழக அரசு நிதி யுதவி செய்ய வேண்டும். பாரதி தாசனுக்கு டெல்லியில் சிலை வைக் கவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT