தமிழகம்

ரிசர்வ் வங்கி ஆளுநர் பெயரில் பணம் பறிக்கும் ஆப்பிரிக்க ஆசாமிகள்: நம்பாதீர்கள் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

போலியான இ-மெயில்களை அனுப்பி ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தற்போது ரிசர்வ் வங்கி அனுப்பியது போன்ற மெயில் களை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய இ-மெயில்களை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியினர் எச்சரித்துள்ளனர்.

வெளிநாட்டு மெயில்கள்

இணைய தளத்தில் ஜிமெயில், யாஹு உள்ளிட்ட மெயில் சேவைகளை பயன்படுத்து வோரில் பலருக்கு பரிசு விழுந் திருப்பதாகவும், பிரபல கோடீஸ் வரர் தனது சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளதாகவும் இ-மெயில் வந்திருக்கும். அந்த பணத்தை பெற சில லட்சங்களை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். இதை நம்பி சிலர் ஏமாந்ததும் உண்டு.

இது தொடர்பான செய்திகளை படித்த மக்கள் தற்போது விழிப் புணர்வு பெற்றுவிட்டனர்.

எனவே மோசடிப் பேர்வழி களின் முயற்சி சமீபகாலமாக கைகூடுவதில்லை. இதைப் புரிந்துகொண்ட அவர்கள், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரின் பெயரிலேயே இப்போது இ-மெயில்களை அனுப்பி பணம் பறிக்கும் முயற்சியை மேற் கொண்டு வருகின்றனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர்

சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த இ-மெயி லில், “தேசிய வங்கிகளில் நீண்ட நாட்களாக கோரப்படாமல் உள்ள பெரும் தொகையை தொடர் புடைய உரிமையாளர்களுக்கு உடனடியாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. எனவே, நீங்கள் குறிப்பிட்ட இ-மெயில் முகவரிக்கு உங்கள் புகைப்படம், பான்கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை உடனே அனுப்பிவையுங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

மேற்கண்ட மெயிலுக்கு பதில் அனுப்பினால், அவர்கள் சொன்ன தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை கமிஷனாக கேட்பார்கள். அப்படி கொடுத்து பலர் ஏமாந்திருக்கிறார்கள்.

ரிசர்வ் வங்கி, பொது மக்களிடமிருந்து பணத்தைப் பெறுவதில்லை. அதுபோன்ற போலி மெயில்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று www.rbi.org.in என்ற எமது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம். இந்த போலி மெயில்கள், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தே அனுப்பப்படுகின்றன. இவற்றை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவோர், போலீஸாரிடம்தான் புகார் செய்யவேண்டும்.

இதுபோன்ற போலி இ-மெயில்களை தடை செய்து தங்களது வாடிக்கையாளரை காக்க இ-மெயில் சேவையை வழங்கிவரும் நிறுவனங்களே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்

SCROLL FOR NEXT