தமிழகம்

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் நேர விதியை மதிக்காத தனியார் பஸ்கள்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில், அரசு அதிகாரிகள் நிர்ணயித்த நேர விதிகளை மதிக்காத தனியார் பேருந்து களால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் வருவாய் இலக்கை எட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து தினந் தோறும், விழுப்புரம் அரசு போக்கு வரத்து மண்டலம் சார்பில் 121 பேருந்து களும், மாநகர போக்குவரத்து பணி மனை சார்பில் 56 பேருந்துகளும், தனியார் சார்பில் 30 பேருந்துகளும் இயக்கப்படு கின்றன. கல்பாக்கம், மதுராந்தகம், தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இங்கு வந்து செல்கின்றன.

இந்நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், அதிகாரிகள் நிர்ணயித்த நேரத்தை பின்பற்றாமல், அரசு பேருந்துகள் இயக்கப்படும் அதே நேரத்தில் தங்களின் பேருந்துகளை இயக்குவதால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. தனியார் பேருந்து ஒட்டுநர்களின் இந்த அடாவடியை சில அரசு பேருந்து ஒட்டுநர்கள் தட்டிக் கேட்பதால், பேருந்து நிலையத்தில் இருதரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. சில நேரங்களில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்படுகின்றன.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கூறியதாவது: அரசு பேருந்துகளுக்கு வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. வருவாய் இலக்கை எட்டாத நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பேருந்து ஓட்டுநர்களின் அடாவடியால், எங்களால் சரியான நேரத்துக்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை. சில நேரங்களில் இருதரப்பினருக்கு இடையே ஏற்படும் தகராறில் அரசு பேருந்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது.

இதற்கும், ஓட்டுநர்களை பொறுப் பாக்கி அபராதம் விதிக்கின்றனர். எனவே, போக்குவரத்து மற்றும் பணிமனை அதிகாரிகள் இதில் தலையிட்டு தனி யார் பேருந்துகளுக்கு உரிய கட்டுப்பாடு களை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மாவட்ட முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் இதே பிரச்சினை உள்ளது. விதியை மீறும் தனியார் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அதிகாரி கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் கூறிய தாவது: அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் தனியார் பேருந்து களை இயக்க அனுமதிக்க முடியாது. விதிகளை மீறி இயக்கப்படும் தனியார் பேருந்துகள் குறித்து, அரசு போக்கு வரத்து பணிமனை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் எழுத் துப்பூர்வமாக புகார் தெரிவித்தால் கட்டா யம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT