தமிழகம்

ஜெ. பதவியேற்பு: சென்னை அம்மா உணவகங்களில் ஒருநாள் இலவச உணவு

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதை ஒட்டி, சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இன்று (சனிக்கிழமை) ஒருநாள் இலவச உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக அளிக்கப்பட்டு வரும் உணவுக்காக, மக்கள் கூட்டம் மிகுந்திருந்தது. இதனால், உடனுக்குடன் உணவுகள் காலியாகின. எனவே, கூடுதல் உணவு சமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒருநாள் இலவச உணவுத் திட்டம், சென்னை மேயர் சைதை துரைசாமியின் உத்தரவின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT