தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.17 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: சென்னை இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்த இளைஞரிடமிருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை பாது காப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டி ருந்தனர். அப்போது சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சீனி இஸ்மத்கான் (30) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பெட்டியில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள வெளி நாட்டு கரன்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், வெளிநாட்டு கரன்சிகளை கொண்டு செல்வ தற்கான முறையான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதி காரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT