தமிழகம்

கார்ப்பரேட் ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி: வாழும் கலை அமைப்பு அறிவிப்பு

செய்திப்பிரிவு

கார்ப்பரேட் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி வழங்கப்படவுள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வாழும் கலை அமைப்பின் பணியிட யோகா வகுப்புகள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:

மனிதர்களின் மனம் மற்றும் மூளை அமைதியாக இருந்தால் தான் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். முன்பெல்லாம் மனிதர்கள் உடலை வருத்தி உழைத்தார்கள், மூளையும், மனதும் அப்போது அமைதி யாக இருந்தன.

ஆனால் இன்றைக்கு மனதையும் மூளையையும் வருத்தி பணி செய்கிறார்கள். இதனால் தேவையற்ற மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் வருகின்றன. இவற்றை யோகா பயிற்சியின் மூலம் தடுக்கலாம். கார்ப்பரேட் அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகவுள்ளது.

எனவே அவர்களுக்கு இலவச யோகா வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்படி மே 30 வரை அந்த நிறுவனங்களுக்கே சென்று இலவச யோகா வகுப்புகளை எடுக்கவுள் ளோம். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் எங்களை அணுகலாம். இதற்காக http://www.iexcelilead.org/meditate/ என்னும் இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இதையடுத்து விண்ணப் பிக்கும் நிறுவனத்துக்கு வாழும் கலை அமைப்பின் பிரதிநிதிகள் வந்து பயிற்சி யளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT