கொளத்தூர் பகுதி பொதுமக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.க.ஸ்டாலினிடம் முறையிட்டனர்.
திமுக பொருளாளரும் கொளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான மு.க. ஸ்டாலின், தொகுதி மக்களுடன் கலந்துரையாடல் செய்வதற்காக ‘பேசலாம் வாங்க’ என்னும் நிகழ்ச்சியை வாரந்தோறும் நடத்தி வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் 300-க்கும் அதிகமான பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பெரும்பாலான பொதுமக்கள், தங்கள் பகுதியில் முறையான சாலை வசதி, கழிவு நீர் அகற் றும் வசதி, குடிநீர் வசதி போன்றவை இல்லையென்று முறையிட்டனர்.
தொலைநோக்கு திட்டம் இல்லை
பொதுமக்களின் கோரிக்கை களை கேட்ட ஸ்டாலின், “சென்னையில் மட்டுமன்றி தமிழகம் முழுவதுமே குடிநீர் பிரச்சினை உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க திமுக ஆட்சியில் பல தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினோம். ஆனால் தற்போது அப்படியான திட்டங்கள் எதுவும் இல்லை” என்றார்.