தமிழகம்

அரசு கேபிள் டிவி நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மு.க.ஸ்டாலின் (திமுக) பேசும்போது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன செயல்பாடுகள் பற்றி குறிப்பிட்டார். அதற்கு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் அளித்த பதில்:

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 2-9-2011 அன்று புனரமைக் கப்பட்டு புத்துயிரூட்டப்பட்டது. இதற்காக இந்த நிறுவனத்துக்கு ரூ.3 கோடி கடன் வழங்கப்பட்டதுடன், நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் என்று மாற்றம் செய்யப் பட்டது. இந்த நிறுவனம், கடந்த திமுக ஆட்சியின்போது நஷ்டத்தில் இயங்கியது.

இந்த ஆட்சியில் புனரமைக்கப் பட்டு, புத்துயிரூட்டப்பட்ட இந்த நிறுவனம், 2012-2013 நிதியாண்டில் முதல்முறையாக ரூ.5.20 கோடி லாபம் ஈட்டியது. 2013-2014-ல் 12.02 கோடியும், 2014-2015 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுக்கு மட்டும் ரூ.12.06 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்றார்.

SCROLL FOR NEXT