தமிழகம்

காரைக்கால் அம்மையாருக்கு இன்று இசை ஆராதனை

செய்திப்பிரிவு

நாயன்மார்கள் 63 பேரில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு வழக்கமாக நடக்கும் மாங்கனித் திருவிழாவைத் தவிர்த்து, இந்த ஆண்டு முதல் இசை ஆராதனை விழா நடத்தப்படுகிறது.

காரைக்காலில் உள்ள காரைக் கால் அம்மையார் கோயிலிலில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டஆட்சியர் வல்லவன் இசை ஆராத னையை தொடங்கி வைக்கிறார். தியாகராஜருக்கு திருவையாறில் ஆராதனை விழா நடத்து வதைப்போல இசைத்தமிழை உருவாக்கிய காரைக்கால் அம்மையாருக்கும் காரைக்காலில் ஆண்டுதோறும் இசை ஆராதனை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், தமிழிசைக் கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்த ஆண்டு எளிய முறையில் தொடங்கப்படும் இவ்விழாவை வரும் ஆண்டுகளில் முன்கூட்டியே திட்டமிட்டு, பெரிய விழாவாக நடத்த வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழிசைக் கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்று அம்மை யாருக்கு தங்கள் இசையால் ஆராதானை செய்ய வேண்டும் என காரைக்கால் பகுதி தமிழறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT