திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை பகுதியில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணிக்க செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்தான வேணுகோபால புரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இதில், 25-க்கும் மேற்பட்ட மாணவ மாணவி யர் படித்து வருகின்றனர். 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, கடந்த 8 ஆண்டுகளாக காலியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் பணியிடம் சமீபத் தில்தான் நிரப்பப்பட்டது.
அப்பணிக்கு சந்தான வேணு கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் விண் ணப்பித்து இருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப் படாமல் 10 கி.மீ. தூரத்தில் உள்ள அம்மையார் குப்பத்தை சேர்ந்த பெண் ஒருவரை அரசு நியமித்துள்ளது.
அந்த பெண் நேற்று முன்தினம் பணியில் சேர்ந்தார். இதனால் கோபமடைந்த, மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தை களை பள்ளிக்கு நேற்று அனுப்ப வில்லை. இதனால், நேற்று பள்ளி யின் வகுப்பறைகள் மாண வர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில் இருந்தனர்.
இதுகுறித்து, கிராம மக்கள் தெரிவித்ததாவது: சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப் பிப்பவர்கள், சந்தான வேணு கோபாலபுரம் ஊராட்சியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதால், கிராம மக்கள் அனைவரும் கலந்து பேசி னோம். அதன்படி, எங்கள் கிராமத் தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்தார். அவருக்கு அந்த பணி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், மற்றொரு கிராமத் தைச் சேர்ந்தவரை அரசு நியமனம் செய்துள்ளது. இதனை கண்டித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப் பாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
ஆகவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரி வித்தனர்.