தமிழகம்

தமிழகத்தில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருந்தால் ஆந்திர படுகொலையைத் தடுத்திருக்கலாம்: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருந்தால் படுகொலையைத் தடுத்திருக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரக் கடத்தல் தொடர்பாக நடந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த அரசநத்தம் கிராமத்தைச் சார்ந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை இன்று (வியாழக்கிழமை) வழங்கினார்.

அரசநத்தம் கிராமத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''வன உயிரினங்களை கொல்லவே அனுமதி இல்லாதபோது மனிதர்களைக் கொல்வதா?

தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருந்தால் படுகொலையைத் தடுத்திருக்கலாம்.

20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்'' என விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT