மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளால் ஏற்பட்ட விவசாய பாதிப்புகள் குறித்து 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் நேற்று 11-ம் கட்ட விசாரணை யைத் தொடங்கினார். காவல், மருத் துவம், துறைமுகம் உட்பட துறை வாரியாக பெறப்பட்ட விவரங்களை இறுதி அறிக்கையில் சேர்ப்பது குறித்து ஆய்வுக்குழு அலுவலர் களுடன் சகாயம் முக்கிய ஆலோ சனை நடத்தினார். குவாரிகளால் ஏற் பட்ட விவசாய பாதிப்புகள் குறித்து வேளாண்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உ.சகாயம் உத்தரவிட்டிருந்தார். மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெய்சிங் ஞானதுரை நேற்று 2 சாக்கு மூட்டைகளில் கொண்டுவந்த ஏராளமான ஆவ ணங்களை சகாயத்திடம் ஒப்படைத் தார்.
இதுகுறித்து ஆய்வுக்குழு அலுவலர் ஒருவர் கூறியதாவது: குவாரிகளால் கால்வாய், நீர்நிலை கள் அழிந்து விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளானது. கண்மாய் களிலிருந்து தண்ணீரே வெளியேற முடியாத நிலை இருந்தது. இந்த பாதிப்புகள் தொடர்பாக 15 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய ஆவணங்கள் சகாயத்திடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆவணங்களின் விபரங்கள் 68 தலைப்புகளில் தொகுக்கப் பட்டுள்ளன. விவசாய பாதிப்புகள் மட்டுமின்றி கிரானைட் முறைகேடு எந்தளவுக்கு இருந்தது என்பதற் கான ஏராளமான சான்றுகள் இந்த ஆவணங்களில் உள்ளன என்றார்.